விறிட்டிஸ் கவுண்சில் நடாத்திய மாவட்டமட்ட ஆங்கில போட்டிகளில் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் வெற்றி சாதனை!

(சித்தாண்டி நித்தி) British Council அனுசரணையுடன் பிராந்திய ஆங்கில கற்கை நிலையம் (RESC) நடத்திய மாவட்ட மட்ட ஆங்கில போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடுதலாக 15 இடங்களையும் மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் தனது வெற்றிசாதனையாக பதிவு செய்தது மட்டுமின்றி கனிஸ்ட பிரிவில் நடைபெற்ற நாடகத்திலும் முதலாம் இடத்தை தனதாக்கி கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இப்போட்டி பயிற்சிகள் அனைத்தும் பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவி அவர்களின் தலையின் கீழ் நடைபெற்றது. 

பிரிட்டிஸ் கவுண்சில் அனுசரணையுடன் நடைபெறும் கற்கை நெறியை பின்பற்றிய ஆசிரியர்கள் தாம் பெற்ற ஆங்கில ஆற்றலை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்கள் என்பதை பரிசோதிப்பதற்காக நடத்தப்பட்ட மேற்படி TKT student competitions  கடந்த 03-02-2014 அன்று மட்/திரேசா கொண்வென்ற் பாடசாலை அரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இப்பாடசாலையிலிருந்து பயிற்சிக்குத் தோற்றிய செல்வி.பிரபாஜினி சாமித்தம்பி மற்றும் திரு.தே.குகதாசன் ஆகிய ஆசிரியர்கள் மேற்படி நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை பயிற்றுவித்தனர். இவ்வெற்றிக்கு சில தினங்கள் முன்பாக இவ் ஆசிரியர்களால் வழிநடத்தப்படும் பாடசாலையின் ஆங்கில மன்றமான Shakespearean English Club  தனது வருடாந்த திறமைகளின் வெளிப்பாடு நிகழ்ச்சிகளை அரங்கேற்றியதுடன் அதற்கு பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் குழாமும் திரு.அ.சிறிதரன் ஆசிரியர் தலைமையிலான அழகியல் பாடப்பிரிவினரும் விஞ்ஞான தொழில்நுட்ப பாடப் பிரிவினரும் பெரும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகள் இந்த ஆங்கில  போட்டியில் கலந்து கொண்டபோதிலும் கல்குடா கல்வி வலயத்திலே அதிகளவான வெற்றிகளைப் பெற்று இப்பாடசாலை சாதனை படைத்துள்ளமை குறிப்படத்தக்கது.