பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலையில் சுதந்திரதின நிகழ்வு.

மட்டக்களப்பு பிரஜைகள் சபை , மட் இந்து மாமன்றம் ஆகியன இணைந்து எதிர்வரும் (04) திகதி செவ்வாய்க்கிழமை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இலங்கை தாயகத்தின் 66 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு விஷேட பூசை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக இந் நிறுவனங்களின் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலாதாஸ் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பட்டிப்பளை கதிரொளி சிவதொண்டர் இல்ல வளாகத்தில் போரினால் இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய மக்களுக்கான புணர்வாழ்வுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, பிரஜைகள் தமது உரிமைகளை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடலுடனான நிகழ்வொன்றும் எமது பிரஜைகளின் உரிமைகளை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய கொடியேற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு இந்நிகழ்வு சிறப்புற நடைபெறவுள்ளதாகவும், அனைத்து தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாடுக்குழு தலைவர் அழைப்புவிடுக்கின்றார்.