கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்.

( ரவிப்ரியா )
கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவ திருவிழாவும், மாசிமக தீர்த்தோற்சவமும் எதிர்வரும் 06ந் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். 12ந்
திகதி புதனன்று வேட்டைத் திருவிழாவும் 14ந் திகதி சப்ரத் திருவிழாவும், 15ந் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெற்று 16ந் திகதி ஞாயிற்றுக் கிழமை பூங்காவனத் திருவிழாவும், 1008 பிள்ளையார் அர்ச்சனைகளும் 17ந் திகதி பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று இரவு வைரவ பூஜையுடன் நிறைவு பெறும்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் திருவிழாவும் இடம் பெறும். மஹோற்சவ குருமார்களாக ஆலயத்தின் குரு சிவஸ்ரீ இ.கணேசகுமாரன், உற்சவ பிரத குரு சைவசித்தாந்த செம்மல், கிரியா கலாமணி ,கிரியா புஷணம், கிரியாதிலகம் சிவத்திரு வேலு யோகராசா . சாதகாசிரியர் ஆசாரிய திலகம் கிரியாஜோதி, பூஜாகிரமஜோதி, சிவத்திரு லோ.குகேந்திரக் குருக்கள் ஆகியோருடன் உதவிக் குருக்களாக சிவத்திரு கு.இரேனுஜ ஐயா, பிரதம பூசகர் சி.;சாந்தகுமார் ஐயா ஆகியோரும் இணைந்து கிரியைகளை மேற்கொள்வர்.