( ரவிப்ரியா )
கல்முனை -02B குவாரி வீதியை சேர்ந்த இராமலிங்கம் தில்லைநாயகம் என்பவர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி திரு ஏ.யூட்சன் முன்னிலையில் நேற்று (29.01.2014)
சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் எருவில் கண்ணகி மகாவித்தியாலயம். பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் கண்ணகி மகாவித்தியாலயத்தின் தற்போதைய பழைய மாணவர் சங்கத்தின் பொருலாளரும். ஆலயங்களின் கணக்கு பரிசோதகரும் எருவில் கலைக்கழகங்களின் ஆலோசகருமாக இருந்து பல சமூகத்தொண்டுகளை செய்து வருகின்றார்.
எருவிலை பிறப்பிடமாகக்கொண்ட இவர் காலஞ்சென்ற இராமானுஷம் இராமலிங்கம் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன உத்தியோத்தர் அவர்களினதும் கந்தப்பு ஞானகியம்மா ஆகியோரினதும் புதல்வனும் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியரும். ஊடகவியலாளருமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஊடக தர்மத்தை நேர்மையாகப் பேணும் ஊடகவியலாளரான இ.தில்லைநாயகத்தின் சமாதான நீதிவான் பணிகள் சிறப்பாக அமைய வற்றி நியூஸ் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.












