பெரியகல்லாற்றில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்.

( ரவிப்ரியா )
பெரியகல்லாறு பிரதேசத்திலிருந்து ஊருக்கு வெளியே சிகிச்சை பெற்றுவரும் சிறுமி ஒருவர் உட்பட 8   பேருக்கு டெங்கு காய்ச்சல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதைக் தொடர்ந்து
பெரியகல்லாறு பொது சுகாதாரப் பரிசோதகர் வே.வேணிதரனின் தீவிர முயற்சியால் 10.02.2014 திங்கள் மாலை வேளையில் டெங்கு நுளம்பிற்கான இரசாயன புகை விசுறும் நடவடிக்கை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டது.

கிணறுகளில் டெங்கு நுளம்புகள் இருப்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தியதன் பின்னரே இந்த நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பூச்சிகள் பிரிவு மற்றும் மண்முனை தென் எருவில் பிரதெச சபை ஆகியவற்றின் பூரண ஒத்தழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக வே.வேணிதரன் தெரிவித்தார்.

ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் இதே நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பெரியகல்லாற்றுக்கு அவசரமாக அழைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந் நடவடிக்கை செவ்வாயன்றும் தொடரும்.

மக்கள் சேவையில் துரித செயற்பாட்டுடன் அதி முக்கிய இந்த பணியை மேற்கொண்டுள்ள இந்தக் குழுவினரை வெற்றி நியூஸ் வெகுவாகப் பாராட்டுகின்றது.