கிரான் பிரதேச மாதர் சங்கத்துக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

(R.Sayan & சித்தாண்டி நித்தி) கிரான் கிராமத்திலுள்ள கிரான் கிழக்கு மேற்கு மாதர் சங்கம் முதியோர் சங்கம் விளையாட்டுக் கழகத்திற்கான தையல் இயந்திரம் போட்டோ பிரதி இயந்திரம் கதிரைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு அன்று (14.02.2014) கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஜீவானந்தம்  தலைமையில் விசங்கேணி பொதுகட்டத்தில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூத்தி முரளிதரன் மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பு செயலாளர் திருமதி பேரின்பமலர் மனோகரதாஸ், அதிகாரசபை பணிப்பாளர் க.சத்தியவரதன் பாடசாலை அதிபர்களான க.ரவீந்திரன் கிராமசேவகர் நந்தினி சமுர்த்தி  உத்தியோகத்தர் துரைசிங்கம் கிரான் பிரதேச ஆசிரிய தலைவி மேகலா வேல்விசன் பிரதி நிதிகள் கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் ஆலய தலைவர்கள் முதியோர் சங்க தலைவர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிழ்வில் கிரான் பிரதேச கிழக்கு மேற்கு பிரிவுகளில் அமைந்துள்ள முதியோர் சங்கம் மாதர் சங்கம் மற்றும் கிரான் கருணா ஐக்கிய விளையாட்டுக்கழம் ஆகிய அமைப்புக்களுக்கு தையல் இயந்திரம் போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் கதிரை என்பன மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூத்தி முரளிதரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அமைச்சருடன் பொதுமக்கள் தங்களின் குறை நிறைகளை  கேட்டது மட்டுமின்றி கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.