வந்தாறுமூலையில் யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்குமாறு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்ட பேரணி

(பேரின்பராஜா சபேஷ் & சித்தாண்டி நித்தி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி வந்தாறுமூலை பிரதேசத்தில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த ஆர்பாட்ட பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்பாட்டம் பிரதான வீதியூடாக ஒரு கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து கமநல சேவைத் திணைக்களத்தை சென்றடைந்தது.



இவர்கள் மனிதனின் உயிர் பெறுமதி அற்றதா? யானைக் காடு எங்கள் பிரதேசம் அல்ல, நாங்கள் யானைக்கு எதிரானவர்கள் அல்ல, யானை வெடியோ மின்சார வேலியோ தேவையில்லை, எங்கள் காடு யானைகள் வளர்க்கும் காடுகள் அல்ல, யானைகளை சரணாலயத்திற்கு கொண்டு செல்லுங்கள், யானையின் அழிவுக்கு எதிரானவர்கள் மனித உயிரை பலி கொள்ளாதே! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய கோசங்கள் எழுப்பியவண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்ட முடியில் மகஜர் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரிடம் கையளிக்கப்பட்டது

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
'
விவசாயத்தை வாழ்வாதார தொழிலாகக் கொண்ட எமது பிரதேசத்தில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளில் தொல்லை காரணமாக வேளாண்மை மேட்டு நிலப் பயிர்ச் செய்கை குடியிருப்புக்கள் மனித உயிர்கள் போன்றன பாரிய அழிவுக்குள்ளாகியுள்ளன.

காட்டு யானைகளின் அழிவிலிருந்து பாதுகாப்புப் பெறும் முகமாக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் மக்கள் பிரதிநிதிகள் வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றறோரிடம் எங்களாலும் பல அமைப்கு;களினாலும் பல தடவைகள் முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களாலும் சில நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டு இன்றுவரை அந்த அழிவிலிருந்து எம்மைப் பாதுகாக்க தவறிவிட்டனர். மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது குறிப்பிட்ட வருடத்திற்குள் 20 ற்கும் மேற்பட்டவர்கள் யானைகளின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 14 பேர் பரிதாககரமாக இறந்ததுடன் 6 பேர் பெரும் காயத்துக்குள்ளாகியுள்ளனர். இன்றுவரை யானைகளின் தாக்குதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறர்.

வறுமை கூடிய மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டு இதற்கான காரணங்களாக பல முன்வைக்கப்பட்டாலும் எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் காட்டு யானைகளால் விவசாயச் செய்கை அழிவுக்குள்ளாகிக்கொண்டு வருவது வறுமைக்குரிய காரணங்களில் மிக முக்கியமானதாகும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக், காயப்பட்ட இறந்தவர்களின் குடும்பங்களுக்கு;, பாதிக்கப்பட்ட உடமைகள் வீடுகள், நஷ்டஈட்டை வழங்ககவேண்டும், யானை தங்கியிருக்கும் பற்றைக் காடுகளை துப்பரவு செய்தல் மற்றும் துப்பரவு செய்வதற்கான அனுமதி வழங்கல் யானைக்குரிய பாதுகாப்பு வேலி அமைத்தல், ஏற்கனவே அமைக்கப்பட்ட வேலிகளை மறுசீரமைத்தல், உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் யானைகளை வேறு இடங்களுக்கு வெளியேற்றுதல் போனற கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் இங்கு கருத்துதெரிவிக்கையில் 'நீங்கள் வழங்கிய மகஜரில் குறிப்பிடப்பட்ட விடயங்களை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பிவைக்வுள்ளேன். இதில் குறிப்பிடப்பட்;டுள்ள விடயங்களுக்கு ஏற்கனவே தீர்வுகள் பெறப்பட்டிருந்தாலும் மக்களுக்கு யானைகளினால் அச்சுறுத்தல் உயிர் ஆபத்துகள் காணப்படுவதை என்னால் காணக்கூடியதாகவுள்ளது இந்த பிரச்சினைக்கு தீர்வுபெற்றத்தரும் நோக்குடன் எதிர்வரும் 17ஆந்திகதி மாவட்ட ரீதியான கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் விவசாயிகள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகளை தெரிவிக்கலாம். யானைத் தாக்குதலினால் இறப்பவர்களுக்குரிய நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. யானைக்குரிய பாதுகாப்பு வேலிகள் தற்போது திருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன' என்றார்