மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி-

 (வரதன்)
பாடசாலை அதிபர் திருமதி த. உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா நெடுஞ்செழியன் மற்றும் கௌரவ அதிதியாக வவுணதீவு அபிவருத்தித் நிறுவனசெயற்றிட்ட திட்ட முகாமையாளர் ஆர் டிலிமா சிறப்பு அதிதிகளாக மண்முனைவடக்கு கோட்டக் கல்வி அதிகாரி அ. சுகுமாரன் முன்னாள் மட்டு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு டேவிற் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றியீட்டிய இல்ல மாணவிகளுக்கு வெற்றிக் கேடயங்களை வழங்கி வைத்தனர். இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் பெற்றார்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அவ் நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வாண்டு புளியந்தீவு நகரில் உள்ள பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நிரந்தர ஒரு விளையாட்டு மைதானம்இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பாடசாலை வளாகத்துக்குள்ளேயே இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.