நேற்றைய தினம் வெகு விமர்சையாக இடம்பெற்ற சிவராத்திரி பூஜை நிகழ்வுகள்

(உ.உதயகாந்த்)

உலக இந்துக்களால் சிவனை பரம்பொருளாக கொண்டு சிவனுக்கு ஓர் ராத்திரி சிவராத்திரி என்று கொண்டாடப்பட்ட நேற்றைய தினத்தில் (27) வியாழக்கிழமை மட்டக்களப்பில் பல பாகங்களிலும் உள்ள இந்து ஆலயங்களில் மிக விமர்சையாக சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டது..

கிழக்கிலங்கையில் ஈழத்து திருச்செந்தூர் என அழைக்கப்படும் பழம்பெருமை வாய்ந்த கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் 1008 சங்காபிஷேக பூஜை நிகழ்வுகள், நான்கு சாம பூசைகள் ஆலய குருக்கள் நிரோஷன் ஜீயினால் நாடாத்தப்பட்டதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

அதே போன்று நாவலடி முகத்துவாரம் ஸ்ரீ காயாத்திரி பீடம், சப்தரிஷி வளாக ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழாவும், புண்ணிய தீர்த்த அபிடேகமும், திருவாசக முற்றோதலும் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதுடன் ஆன்மீக உரைகளும், சிவமஹா யாகமும் இடம்பெற்றது.


ஸ்ரீ காயாத்திரி பீடத்தில் இடம்பெற்ற கிரியா நிகழ்வுகள் யாவற்றையும் ஆலய பிரதமகுரு சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார் மிகவும் சிறப்பாக நடாத்தினார். 

இவ்விரு ஆலயங்களிலும் நடைபெற்ற விஷேட சிவராத்திரி நிகழ்வுகளில் கிழக்கின் பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் திரளாக வருகைதந்து அனைத்து பூசை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.  


ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள்









ஸ்ரீ காயாத்திரி பீடத்தில் இடம்பெற்ற கிரியா நிகழ்வுகள்