வவுணதீவப் பிரதேசத்தில் காட்டு யானைகளினால் பொதுமக்களுக்கு பாதிப்பினை தவிர்ப்பது தொடர்பான ஆராயும் விசேட கூட்டம்.

(மா.சசி )
வவுணதீவுப் பிரதேசத்தில் காட்டு யானைகளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயராளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது.

வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட காந்திநகர்,பாவற்கொடிச்சேனை,உன்னிச்னை,பன்சேனை  ஆகிய கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் யானைகளின் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் இதனால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அதனால் ஏற்படும் பாதிப்பினையும் தவிர்ப்பது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் சேதமடைந்த யானை வேலியினைத் திருத்தியமைப்பதுடன் மேலதிகமாக அமைக்கவேண்டிய வேலியினை அமைத்தல்.
பாதிக்கப்பட்ட மக்களுக்க மூன்று மாதத்துக்குள் நஸ்ரஈடு வழங்க நடவடிக்கை எடுத்தல்.
யானை வேலிக்கட்பட்ட பகுதியில் உள்ள யானைகளை வேலிக்கு அப்பால் இராணுவம் மற்றும் பொலிஸார் பெதுமக்களின் ஒத்துளைப்புடன் எதிர்வரும் 5ஆம் திகதி துரத்துதல்.
யானை தரித்து நிற்கும் காடுகளை அழித்து துப்பரவு செய்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்தே பிரதேச மட்டத்தில் இவ்வாறான கூட்டங்கள் கூடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
நேற்று இடம்பெற்ற இக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்,உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு,வன ஜீவராசிகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகளான ரி.ஜெகதீஸ்,கே.ஜானகசாந்தகுமார,வவுணதீவுப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜே.கே.வகாப்தீன்,தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியொகஸ்தர்கள்,கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.