பொதுநிர்வாக உள்நாட்டலுல்கள் அமைச்சின் கடிதத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும்அத்துடன் சில பிரதேச செயலாளர்கள் உடனடியாக அமுலுக்க வரும்வகையில் இன்று முதல் இடமாற்றப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ்.பாஸ்கரன் அவர்கள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிவந்த எஸ்.கிரிதரன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிவந்த வெ.தவரரஜா அவர்கள் மண்முனை வடக்குக்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுதாகர் அவர்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













