(உ.உதயகாந்த்)
ஆரையம்பதி ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தினையும்
சிவனுக்குரிய மஹா சிவராத்திரி தினத்தினையும் முன்னிட்டு செல்வாநகர் பாகை மக்களால் இன்று
27.02.2014 வியாழக்கிழமை காலை தேர் திருவிழா நிகழ்வு மிக விமர்சையாக இடம்பெற்றது.
ஆலயத்திலிருந்து ஆரம்பமான சித்திர தேர்
பவனியானது ஆரையம்பதி பிரதான வீதிகளின் ஊடாக பக்தர்களின் பக்திபூர்வமான அரகரா
கோசத்துடன் வடம்பிடிக்க சிவனேஸ்வரப்பெருமான் வீதியுலா வந்ததுடன், தேரின் முன்னே
சிறார்களினால் இந்துக்களின் பாரம்பரியத்தினை பிரதிபலிக்கும் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
வீதியின் இருமருங்கிலும் அனைத்து இந்து இல்லங்களின்
வாயிலிலும் பூரணகும்பம் வைத்து பெருமானை வரவேற்று வழிபட்டதும் குறிப்பிடத்தக்கது.












