கல்முனை தரவை கோயில் வீதியை பள்ளிவாசல் வீதியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம்.

கல்முனை வாழ் தமிழர்களினால் தரவை பிள்ளையார் வீதியினை கடற்கரை பள்ளிவாசல் வீதியாக மற்றுவதனை எதிர்த்து அமைதி பேரணி ஒன்று இன்று காலை கல்முனையில் நடைபெற்றது.

பல நூறு ஆடு கால வரலாற்றை கொண்ட கல்முனை தரவை பிள்ளையார் ஆலயத்துக்கு எதிரில் செல்லும் வீதியினை தரவை பிள்ளையார் ஆலய வீதி என்று காலகாலமாக இருந்து வருகின்றது. இதனை  இவ்வீதியின் பெயரினை கடற்கரை பள்ளிவாசல் வீதி என்று மாற்ற முற்பட்டு கல்முனை மாநகர சபையிலும் விவாதத்துக்கு எடுத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு விட்டது.


இச் செயற்பாட்டின் மூலம் கல்முனைத் தமிழர்கள் தமது இருப்பிடங்களையும் காணிகளையும் பாதுகாத்துக் கொள்ள தமிழர்கள்  தனியான பிரதேச சபை கோருவதில் எவ்வித தவறும்மில்லை என பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர் .

இவ் ஆர்பாட்டத்தில் கல்முனை இந்து ஆலய பிரதம குருக்களும், கல்முனை விகரதிபதியும், கிருஸ்தவ பாதிரியார் ஆகியோரினால் இவ் எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் மகஜர்கள் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் கையளிக்கப்பட இருந்தது. மாநகர மேயர் இல்லாததினால் அவர்க்கான பிரதியினை மாநகர ஆணையாளரிடமும், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் இல்லாததினால் உப செயலாளரிடம் கையளிக்கப்பட்டது 

இவ் எதிர்ப்பு பேரணி பல தடங்கல்களுக்கு மத்தியில் செய்து முடித்துள்ளதாக ஆர்பாட்ட ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். அத்துடன் கலந்து கொண்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.