சமாதான நீதவானாக சு.கார்த்திகேசு பதவிப்பிரமானம்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தைத் சேர்ந்த சுப்பிரமணியம் கார்த்திகேசு கடந்த வியாழக்கிழமை 13ம் திகதியன்று அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஏ.ஜீ.அலேஷ்ராஜ் அவர்களின் முன்னிலையில் கல்முனை நீதி நிர்வாக வலயத்திற்கான ஒரு சமாதான நீதவானாக சந்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளார்.

இவர் அம்பாறை மாவட்ட குருகுல ஆதீனத்தின் முதல் மாணாக்கரும் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய பழய மாணவரும் கண்டி பேராதனைய பல்கலைக் கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்த இவர் ஒரு ஊடகவியலாளரும் சிறந்த எழுதாளரும் கவிஞரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமாவர். 

மேலும் இவர் அம்பாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல சிறுவர் அபிவருத்தி நிலையத்தின் பொருளாளரும் சிவில் பாதுகாப்புக் குழுவின் பிரிவுத் தலைராகவும் இருப்பதுடன் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக சமூக,சமய மற்றும் இலக்கிய துரையிலும் தனது பணிகளை ஆற்றிவருவதுடன், இவரை மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக சமூக சேவைக்காக கௌரவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.