(து.கௌரீஸ்)
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பின் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான கபடிப் போட்டி இன்று 16.02.2014 ஆந் திகதி சீலாமுனை யங்ஸ்டார் மைதானத்தில் மண்முனை வடக்கு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் பு.ரூபராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் முன்னிலையில் நடைபெற்றது.
ஆண்களுக்கான போட்டியின் இறுதிப் போட்டியில் சோட்டோகான் அணியும் மைக்கல்மேன் அணியும் மோதின இதில் சோட்டோகான் அணி வெற்றி பெற்று முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டது. இறுதிப் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்குபற்றி பதக்கங்கள் வென்ற முன்னணி வீரர்கள் பலர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான போட்டியில் சின்ன ஊறணி சன்றைஸ் விளையாட்டுக் கழக அணி தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

















