கிழக்கிலங்கையின் பழம்பெரும் பாண்டவர் பூமியென பிரசித்திபெற்ற கல்முனை பாண்டிருப்பில் கடற்கரை வீதியில் புதிதாக அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சிவன் ஆலயத்தின் பிரதிஷ்டா மஹா கும்பாபிசேகமானது எதிர்வரும் 09.02.2014 , ஞாயிற்றுக்கிழமை சுபமூர்த வேளையாகிய காலை 7.21 மணிமுதல் 8.33 மணிவரை சிவ ஸ்ரீ கணபதி ஐயர் யோகராசா குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
கும்பாபிசேக நிகழ்வின் ஆரம்பக்கட்டமாக இன்று (07) காலை 7.00 மணிமுதல் கர்மாரம்பம் ஆரம்பிக்கப்பட்டு, புதிய விக்கிரகங்கள் கிராமப்பிரதட்சணம் செய்வதற்காக மக்கள் பார்வைக்காக வீதியுலா வருவதுடன், நாளை மறுதினம் (08) சனிக்கிழமை காலை 7.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை தெய்வ விக்கிரகங்களை தொட்டு பேரின்பமடைந்து எண்ணைக் காப்பு சாற்றும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும், அனைத்து சிவனடியார்களையும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.
ஆலய வளர்சிக்கு உதவ விரும்பும் நல்லுள்ளங்களை இவ் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர். - 077 8139154


.jpg)











