(வாழைச்சேனை நிருபர்)வாழைச்சேனை – புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலயத்தில் மூலஸ்தானம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று (09.02.2014) ஞாயிற்றுக் கிழமை நாட்டப்பட்டது.
ஆலயத்தின் தலைவர் எஸ்.யோகநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
19960ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆலயத்திற்கு வெளிநாட்டிலும் மற்றும் உள்நாட்டிலும் இருக்கும் தனவந்தர்களின் 18 லட்சம் ரூபா நிதியளிப்பில் இவ் மூலஸ்தானம் அமைக்கப்படவுள்ளதாக ஆலயத்தின் பரிபால சபையினர் தெரிவித்தனர்.



















