பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் மற்றும் பெரண்டினா வேலைவாய்ப்பு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய அலுவலகம் 26.02.2014 காலை 10.30 மணியளவில் பெரண்டினா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு. ஜகத் கொடகந்த அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் திரு. எஸ். ரகுநாதன் கலந்து சிறப்பித்தார். பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் பொது முகாமையாளரான திரு. அ. அருண் இரோஷன் மற்றும் பெரண்டினா தொழில் நிலையத்தின் பொது முகாமையாளர் திரு. ஹேமந்த ஜகத் ஹரிஸ்சந்ர அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், வவுனதீவு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் உபதலைவரும் கலந்து கொண்டனர்.
பெரண்டினா நிறுவனத்தின் இயக்குனர் திரு. ஜகத் கொடகந்த அவர்களினால் பெரண்டினா நிறுவனத்தின் தோற்றம் மற்றும் சேவைகள் பற்றி தலைமை உரை ஆற்றினார். அத்துடன் பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் பொது முகாமையாளரான திரு. அ. அருண் இரோஷன் அவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரண்டினா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினரான மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலாளரான திரு. எஸ். ரகுநாதன் அவர்களினால் சிறப்புரையாற்றப்பட்டது.
மேலும் இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக பெரண்டினா நிறுவனத்தின் கடந்த 25 வருட கால அடைவுகளை சித்தரிக்கும் ஒலி, ஒளித்தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.


















