வவுணதீவில் சிறப்பாக இடம்பெற்ற பயிர்ச்செய்கை அறுவடை நிகழ்வு

வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில் திவிநெகும திட்டத்துடன் இணைந்து செய்கைபண்ணப்பட்ட பயிர்ச் செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

இவ் அறுவடை விழாவில் அறுவடையினை மண்முனைமேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக  உத்தியோகத்தர்களால் அறுவடை செய்யப்பட்டது.

மேற்படி பயிர்ச் செய்கைத் திட்டம் "திவிநெகும" வாழ்வாதாரத் திட்டத்துடன் இணைந்து பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கமைவாக செயற்படுத்தப்பட்டது. இத் திட்டத்தின்கீழ் நிலக்கடலை,மரவள்ளி, அவரை,பப்பாசி. வெண்டி, தக்காளி,கத்தரி போன்ற பல பயிர் வகைகள் செய்கை பண்ணப்பட்டது.

மேற்படி திட்டம் இப் பிரதேச திவிநெகும விவசாயத் திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கும் ஏனையொருக்கும் ஓர் முன்மாதிரியான செயற் திட்டமாக அமைந்திருந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது.