
பேரின்பராஜா சபேஷ்
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தையிட்டு கிழக்குப் பல்கலைக் கழக லயன்ஸ் கழகத்தினரால் செங்கலடி பிரதேச மக்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு; மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
கிழக்குப் பல்கலைக் கழக லயன்ஸ் கழக தலைவர் லயன் எஸ்.ரெட்ணராஜ் தலைமையில் பல்லைக்கழக வந்ததாறுமூலை வழாக மைதான அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் உபவேந்தர் கலாநிதி கி.கோபிந்தராஜா, லயன்ஸ கழக இரண்டாம் நிலை ஆளுநர் லயன் றிக்கும் வீரகொடி, பல்கலைக் கழக பதிவாளர் கே.மகேசன்,சிரேஷ்ட உதவிப் பதிவாளர் லயன் ஏ.பகிரதன், பீடாதிபதிகளான காலாநிதி ரீ.சுந்தரநேசன், காலநிதி கே.இராஜேந்திரம், கலாநிதி எஸ்.சுதர்சன், கலாநதி ப.றாகல், நா.லோகேஸ்வரன், அன்டனி அன்ரூ, பெ.சச்சிதானந்தம், பொறியியலாளர் மோகனப்பிரியன் பல்கலைக் கழக லயனஸ் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கண் பரிசோதனைக்காக வந்திருந்த 129 பேரில் கண் படல சத்திர சிகிச்சைக்குகுரிய 12 பேர் தவிந்த அனைவருக்கும் முக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதன்போது செங்கலடி பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட லியோ கழகத்தின் உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர.


















