03 நாட்களுள் 14 ஆவணப்பிரதிகளுடன் 49 வினாக்களுக்கு விடையா?

03 நாட்களுள் 14 ஆவணப்பிரதிகளுடன் 49 வினாக்களுக்கு விடையா?
அதிபர் ஆசிரியர் திண்டாட்டம் என்கிறது தமிழர் ஆசிரியர் சங்கம்!

அதிபர் ஆசிரியர் நன்மை கருதியே தொகை மதிப்பீடு செய்கிறோம் :
கஸ்டப்பிரதேச கொடுப்பனவு வழங்கல் ஆசிரியர் இடமாற்றம் சீராகும்!
28ம் திகதி முடிவுத்திகதி என்கிறார் மாகாண கல்விப்பணிப்பாளர் நிசாம்!

கிழக்கு மாகாணத்திலுள்ள 911 அதிபர்கள்  20124 ஆசிரியர்களது நன்மை கருதியே தொகை மதிப்பீடு செய்கிறோம்.இதன்மூலம் கஸ்டப்பிரதேச கொடுப்பனவு வழங்கல் தொடக்கம் ஆசிரியர் இடமாற்றம் வரை இன்னோரன்ன விடயங்களை சீராக்கவுள்ளோம்.இத்தகவல்களை எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தால் போதுமானது. ஆசிரியர்கள் ஒத்துழைத்தால் அவர்களுக்கு நல்லது.
இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்அல்ஹாஜ் எம்.ரீ.ஏ.நிசாம் தம்மிடம் விளக்கம் கோரிய இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜாவிடம் விளக்கமளிக்கையில் குறிப்பிட்டார்.

முன்னதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா அவரிடம் வினவுகையில்,
தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர் தொகை மதிப்பீட்டு 04 பக்க ஆங்கில மொழிமூல விண்ணப்படிவங்களை விநியோகித்து 03 நாட்களுள் அதில் கேட்கப்பட்டுள்ள 13  ஆவணங்களின் பிரதிகளையும் கேட்கப்பட்ட 49 வினாக்களுக்கு ஆங்கிலத்தில் விடையளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இவர்களது பிறப்புச்சான்றிதழ் கல்வித்தகைமைச்சான்றிதழ்கள் முதல் நியமனம் உள்ளிட்ட பல சான்றிதழகள் அவரவர் வலயக்கல்வி பணிமனையில் சுய விபரக்கோவையில் உள்ளதுதானே அதில் எடுத்துக்கொள்ளலாமே.  மேலும் வதிவிடச்சான்றிதழ் மற்றும் வாக்காளர் பட்டியல்  சான்றிதழ் எல்லாம் எடுப்பதானால் லீவு போட்டு ஆசிரியர்கள் அலையவேண்டுமே. சில வலயம் இன்று விண்ணப்பப்படிவங்களைக் கொடுத்துவிட்டு 3நாட்களுள் அதாவது வெள்ளிக்கிழமைக்குள் தரவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. இந்நிலையில் லீவில்லாமல் எவ்வாறு ஆசிரியர்கள் இச்சான்றிதழ்களைப் பெற்று பிரதிசெய்து வழங்குவது? இது சாத்தியமா? என்று கேட்டார்.
பதிலளித்த பணிப்பாளர் நிசாம் மேற்கண்டவாறு கூறி மேலும் கூறுகையில்:
நாம் 3 நாட்களுள் இதனை வழங்குமாறு கோரவில்லை. எதிர்வரும் 28ம் திகதிக்குள் வழங்கினால் போதுமானது என்றே கேட்டிருந்தோம். வாக்காளர் பட்டியல் கட்டாயம் பெறவேண்டுமென்பதில்லை. மாறாக வதிவிடச்சான்றிதழ் பெற்றால் போதுமானது.

அவர்களது வதிவிடத்திலிருந்து கற்பிக்கும் பாடசாலையின் தூரத்தை கணித்து புதிய திட்டத்தின்கீழ் கஸ்டப்பிரதேச கொடுப்பனவை வழங்க திட்டமிட்டு;ள்ளோம். இதுவரைகாலமும் பாடசாலையை மையமாகவைத்தே இக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.அதில்  அநீதி அழைக்கப்படட்டுள்ளதாக நீங்களே கூறியுள்ளீர்கள். எனவே ஆசிரியரை மையமாகவைத்து தூரத்தை உத்தேசமாக 20 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியருக்கு கஸ்டப்பிரதேச கொடுப்பனவை வழங்கவுள்ளோம்.
அதுபோல ஆசிரியர் இடமாற்றமும் சீர்செய்யப்படவேண்டும்.அதற்கு சரியான தகவல்கள் தேவை. சில வேளைகளில் எமக்கு முற்றிலும் தவறான தகவல்களை அவர்களது அகவயத்திற்கேற்ப சில அதிபர்கள்வழங்கிவந்துள்ளனர். வர்த்தகப்பட்டதாரிக்கு விஞ்ஞான பட்டதாரி என்று தந்துளளனர். இவையெலாம் ஆசிரியர்களைப் பாதிக்கும் விடயங்களே.
எனவே பல விடயங்களை கருத்திற்கொண்ட அதிபர் ஆசிரியர் நன்மைகருதியே இத்தொகை மதீப்பீட்டை செய்கிறோம். இதன்பின்பு பெரும்பாலும் பிழைகேடு நடக்க வாய்ப்பில்லை. என வே தங்களைப்போன்ற பாரிய ஆசிரியர் சங்கங்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். என்றார்.