பகவான் இராமகிருஷ்ணரின் 179 ஆவது ஜயந்தி தினம் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிசனில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
முதல் நிகழ்வாக இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தாவினால் இராமகிருஷ்ணரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
ஊர்வலம். பக்திப்பாடல், கொடியேற்றம், அகண்ட நாம பஜனை, சொற்பொழிவு, ஹோமம் என்பன இடம்பெற்றன.
இல்ல மாணவ மாணவிகளுடன் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நெறிகள் நிறுவகத்தின் பட்டதாரி பயிலுனர் மாணவர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.












