இலங்கையில் வெளிக்காட்டிக் கொள்ளாத 4000 காசநோயாளர்கள்

சுகாதார அமைச்சின் காச நோய்க் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்ச் சிகிச்சைப் பிரிவின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று காச நோய் மற்றும் மார்பு நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மார்பு நோய்ச் சிகிச்சை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  காச நோய் மற்றும் மார்பு நோய் பற்றிய விழிப்புணர்வு இன்று காலை ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலிருந்து செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவு வரை கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாகச் சென்றது.

வேர்ள்ட் விஷன் நிறுவனம் இதற்கு அனுசரணை வழங்கியிருந்தது.
இலங்கையில் சுமார் நான்காயிரம் காச நோயாளர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதாக விழிப்புணர்வு ஊர்வல பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.