(உ.உதயகாந்த்)
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வானது வித்தியாலயத்தின் அதிபர் கப்டன் கே.மனோராஜ் தலைமையில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இன்று (08) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்விற்கு மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், விசேட அதிதிகளாகக உதவி கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) வீ.லவக்குமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ரீ.ஈஸ்வரன் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றியீட்டிய
வீரர்களுக்கு வெற்றிக்கேடையங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்கள்.