உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மாநகர பிரதேசம் டெங்கு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதனால் அழகானதும் ஆரோக்கியமானதுமான மாநகரத்தினை அமைக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கலென மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றார்.
அதிலும் நாவற்குடா பொது சுகாதாரப் பகுதியில் அதிகமான டெங்கு நோயாளர்கள் குறிகிய காலத்திற்குள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும், இதன் நிமிர்த்தம் எதிர்வரும் 31.03.2014 ஆம் திகதி காலை 7.00க்கு சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் பாரிய சிரமதான நிகழ்வானது மாநகர சபை ஆணையாளர் தலைமையில் மாநகர சபை ஊழியர்களினால் நாவற்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதெனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் அன்றைய தினம் தாங்கள் தங்களது வீடுச் சுற்றுச் சூழல் மற்றும் வெற்றுக்காணிகளைச் சுத்தம் செய்து கிடைக்கப்பெறும் கழிவுகளை சேகரித்து நடைபெறவிருக்கும் சிரமதானத்தின் போது மாநகர சபையின் திண்மக்கழிவகற்றும் வாகனத்திற்கு அவற்றை வழங்குமாறும், அன்றைய தினம் மாநகர சபை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்; பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுச்சூழல்கள் பரிசோதிக்கப்படுவதுடன் அதன் போது தங்களது பகுதியில் டெங்கு நுளம்புபரவக் கூடிய சூழல் காணப்படின் தங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிப்பதுடன், அன்றைய தினம் தங்களது வீடுகள், காணிகள் பரிசோதிக்கப்படும் போது வீட்டின் உரிமையாளரோ அல்லது பொறுப்புவாய்ந்த ஒருவரோ தவறாது பிரச்சன்னமாகியிருந்து மேற்படி பணிக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களை மாநகர ஆணையாளர் கேட்டுக்கொள்கின்றார்.













