(சிவம்)மட்டக்களப்பு , கோட்டைமுனை, புன்னையம்பதி மஹாமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்ததடன் ஆரம்பமானது.
தொடர்ந்து ஏழு நாட்கள் ( 09.03.2014 முதல் 15.03.2014 வரை) அபிஷேகம், மூலவர் பூஜை, ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெறும்.
ஞாயிறு (16.03.2014) காலை இரதோற்சவம், திங்கள் ( 17.03) தீர்த்தோற்சவம், செவ்வாய் ( 18.03) பூங்காவனத் திருவிழா என்பனவறறுடன் உற்சவம் நிறைவு பெறும்.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வரத கோபாலகிருஷ்ண சிவாச்சாரியார், மாமாங்கப் பிள்ளையார் பேராலய பிரதமகுரு சிவஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் மற்றும் உதவிக்குருமார் ந. பாலசுப்பிரமணிய சர்மா, பா. அஜந்தன் சர்மா ஆகியோருடன் சர்வசாதகர் வெங்கட கஜராஜசர்மா ஆகியோர் சகிதம் கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
















