ஆலையடிவேம்பு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட விவசாய நெற் செய்கையாளர்களின் நீர்
மற்றும் ஏனைய தேவைகளை தீர்த்துவைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாண்டிற்கான ஆரம்ப கூட்டமானது
கடந்த (14) வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில் பிரதேச செயலக
கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நீர்பாசன பொறியியலாளர் செ.சுபாஹரன் உட்பட தொழில்நுட்ப
உத்தியோகத்தர்கள், பெரும்பாக உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள்,
கண்டங்களின் பிரதிநிதிகலென அதிகளவிலானோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின்போது விவசாயிகளின் குறைகள் வெளிக்கொணரப்பட்டதுடன், அவற்றை தீர்த்து வைப்பதற்கான ஆலோசனைகள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.












