தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வுகள்!


(தீரன்)
தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை நிர்வாகத்தினரால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


“நோயற்ற பாதுகாப்பான சமூதாயத்தினை கட்டியெழுப்புதல்” என்னும் தொனிப்பொருளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆலோசனையுடன் சுகாதார அமைச்சு நாடளாவிய ரீதியில் இந்த தேசிய சுகாதார வாரத்தினை மேற்கொண்டு வருகின்றது.

இதன் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு மாபெரும் சிரமதான நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள், நோய்களை இனங்காண்பது சம்பந்தமான பரிசோதனை நிகழ்வுகள் போன்றன நடைபெற்றன.

இரண்டாவது நாள் நிகழ்வாகஇன்று(12.03.2014) புதன்கிழமை காலை 8.00 மணியளவில் வைத்தியசாலை ஊழியர்களுக்கான NCDநோய் உள்ளவர்களை இனங்காண்பதற்கான அடிப்படை பரிசோதனை நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்ராலெப்பை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் Dr.திருமதி.நவரெட்னராஜா ,உதவி பணிப்பாளர் Dr.திருமதி k.கணேசலிங்கம், பொதுச் சுகாதார வைத்தியர் Dr.P.G.P.டானியல்,வைத்தியசாலை பொதுச்சுகாதார பரிசோதகர் துளசி முகுந்தன் நிர்வாக உத்தியோகத்தர் T.குகராஜா கணக்காளர் Mr.K .M .S.அமீர் அலி உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் தாதியர்கள் கலந்துகொண்டனர்.