நான்காவது அகவையில் காலடி பதித்துள்ள எமது இணையத்தளத்தின் நிகழ்வு


நான்காவது அகவையில் காலடி பதித்துள்ள Battinews.com  இணையத் தளத்திற்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ள ஆயிரக்கணக்கான எமதன்பு வாசகர்களுக்கும் மற்றும் எமது இணையத் தளத்தை அணுகிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.


பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இணையத் தளத்தின் ஸ்தாபகரின் ஆர்.சயன் தலைமையில் நேற்றய தினம்  ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் மட்டக்களப்பு கோப் - சென்ரர் மண்டபத்தில் இடம்பெற்றன.
கிழக்கு மக்களின் பேரவலங்கள் முதல் மக்களின் எழுற்சி வரையும் சோரம் போகாது நடுநிலை நின்று கிழக்கு மண்ணிலிருந்து உலகத் தமிழருக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கினோம்.

Battinews.com  இணையத் தளத்திற்கு ஆலோசனைகளையும் மற்றும் செய்திகளையும் அனுப்பி எம்மை முன்நிலைப்படுத்திய எமது செய்திக் குடும்பத்தினருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் அன்புகலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புதிய ஆண்டில் புதுப்புது செய்திகளை சுடச்சுட சுந்தரத் தமிழினிலே தருவதற்காக புதிய பரிணாமத்துடன் இன்று முதல் நான்காவது வயதுக் குழந்தை காலடி பதித்துள்ளது. எமது செய்திக் குழாமைச் சேர்ந்த குடும்பத்தினர்கள் தொடர்ந்தும் உங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருமாறு அன்பாக வேண்டுகின்றோம்.

எமக்கு உரமூட்டி உற்சாகப்படுத்தி முதல்நிலையில் வளர்த்தெடுத்த அனைத்து நல்உள்ளங்களின் ஒத்தழைப்பையும், ஆதரவையும் எதிர்வரும் காலங்களிலும் வேண்டி நிற்கின்றோம்.

மேலும், இன்றய தினம் செய்தியாளர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டது.

எமது தனித்துவமான இணையத்தளத்துடன் கடந்த காலங்களைப்போல் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருக்கவும். என்பதனை நன்றியுடன் அறியத்தருகின்றோம்.