தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வுக் கருத்தரங்கு


இலங்கை சுகாதார அமைச்சினால் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய சுகாதார வாரமானது நாடுபூராகவும் மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதனை முன்னிட்டு வம்மியடியூற்று(மண்டூர் 40) மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

அதன் ஒரு அங்கமாக வம்மியடியூற்று மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று(14) மட்/மண்டூர் 40 அ.த.க. பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு.க.பகீரதன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இக்கலந்துரையாடலில் பொதுச் சுகாதார பரிசோதகர் இராஜேஸ்வரன்,விக்கினேஸ்வரராசா(PHI),லவகீர்த்தனன்(சு.வெ.உ.) கலந்துசிறப்பித்தனர். தொற்றா நோய் சம்பந்தமாகவும், மதுப்பாவனை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்படது.  
(பழுவூரான்)