கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் இன்று சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீது பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜீன் போல் மொனசூ விடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் தூதுவர் வெள்ளிக்கிழமை 13.03.2014 திருகோணமலை மாவட்டத்திற்கு வந்திருந்தார்.
முதல் அமைச்சரை நேற்று வெள்ளிக்கிழமை 14.03.2014 அவரது அலுவலயகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது முதலமைச்சரின் செயலாளர் யு.எல.எம்.அசீஸ் மாகாண முன்பள்ளி கல்வி யக பணிப்பாளர் பொன்செல்வநாககம் ஆகியோரும் உடனிருந்தனர்.

தற்போது நாட்டில் சுமுகமான நிலை ஏற்படுத்தப்பட்டள்ளது. சகல பிரதேசங்களிலும் ஜனநாயக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பயங்கரவாத பிரச்சினை காரணமாக ஜனநாயக கட்டமைப் புகளை அமுல்படுத்துவதில் பிரச்சினை காணப்பட்டது. தற்போது அவ்வா றான நிலை இல்லை. நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்ப்பட்டு மக்கள் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு வடக்கு மாகாண சபை சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.
நாடு அடைந்திருக்கும் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் இல்லாமல் செய்து மீண்டும் பயங்கரவாத பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு அரசாங் கத்திற்கு எதிரான சக்திகள் முனைந்து வருகின்றன. அவ்வாறான சக்தி கள் மனித உரிமை மீறப்படுவதாகவும் போர்குற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் சர்வதேச விசாரணை என்ற தந்திரோபாயங்களை பயன்படுத்தி இலங்கையை சர்வதேசத்தில் குற்றம் புரிந்த நாடாக அடையாள்ப்படுத்த முயற்சி செய்து வருகின்றார்கள்.
மககள் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் பலமான ஜனநாயக நாட்டின் துதுவர் என்ற வகையில் இங்குள்ள யதார்த்த நிலமைகளைப் புரிந்து கொண்டு செயற்படுவதோடு அதனை சர்வதேச சமூகத்திற்கும் உரிய முறையில் வெளிப்படுத்துவீர்கள் என்று நம்புகின்றோம். என்று கிழக்கு மாகாண முதல் அமைச்சர் குறிப்பிட்டார்.