கிரான் காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்ற பெண் ஒருவர் யானை தாக்கி பலி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் மினுமினுத்தவெளி காட்டுப் பகுதியில் தேன் எடுக்கச்சென்ற பெண் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
மாங்கேணி பாம்கொலனி என்ற இடத்தைச் சேர்ந்த பத்மன் பொன்னம்மா என்ற 75 வயதுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றையதினம் மேற்படி பெண்ணும் அவரது கணவரும் தேன் எடுப்பதற்காக கிரான் பிரதேச மினுமினுத்தவெளி காட்டுப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கணவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்