பிரதியமைச்சர் முரளிதரனுடன் கல்வி சுகாதாரம் தொடர்பாக சந்திப்பு.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனுடன் கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திச் சபை மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் நேற்று மட்டக்களப்பில் சந்தித்து கலந்துரையாடியது.

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள 03 தமிழ் பாடசாலைகளில் க.பொ.த.உயர்தர தொழினுட்பப்பாடத்தினை போதிக்க அனுமதி கல்முனை சம்மாந்துறை வலயங்களிலிருந்து தனியான நாவிதன்வெளி வலயம் மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திபற்றியும் கலந்துரையாடப்பட்டன. அடுத்த வாரம் கொழும்பு சென்றவுடன் இவ்விடயங்கள்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்கடும் என பிரதியமைச்சர் உறுதியளித்தார்.