(சித்தாண்டி நித்தி) கொம்மாதுறை ஒருமுழச்சோலை சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி இன்று (07.03.2017) பாடசாலை திரு.வெ.ராஜேந்திரன் அதிபர் தலைமையில் பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதி ஏறாவூர்ப் பற்று-2 கோட்டக்கல்வி அதிகாரி திரு.பொ.சிவகுரு சிறப்பு அதிதி ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் திரு.வ.பஞ்சலிங்கம் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அதிதி வரவேற்க்கப்பட்டதுடன் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு மாணவர்களுக்கான விளையாட்டுகள் மாணவ மாணவிகளின் அணிநடை பழைய மாணவர்களுக்கான விளையாட்டுக்கள் பெற்றர்களுக்கான விளையாட்டுக்கள் ஆசிரியர்களுக்கான விளையாட்டுக்கள் விநோத விடை என்பனவும் இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வெற்றிக்கேடயங்கள் என்பனவும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.























