ஏறாவூர் அலிஹர் தேசிய பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) ஏறாவூர் அலிஹர் தேசிய பாடசாலை  விளையாட்டு போட்டி நிகழ்வு இன்று பாடசாலை பொது மைதானத்தில் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கிழக்கு மாகாண பிரதி முதல்வர் எம்எஸ் சுபைர் மற்றும் ஏறாவூர் பற்று நகர தலைவர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா  மற்றும் அதிதிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் அணிநடை நடைபெற்றதை தொடர்ந்து  விளையாட்டுக்களில் வெற்றிகளை பெற்ற வீரர்களுக்கு கலந்துகொண்ட அதிதிகளினால் பரில்கள் வெற்றிக்கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டன.