அக்கரைப்பற்று பிரதேச சபைக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டடத் தொகுதித் திறப்பு விழா

(எம்.ஏ.றமீஸ்,ஏ.ஜி.ஏ.கபூர், )
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டடத் தொகுதித் திறப்பு விழா இன்று(28) மாலை இடம்பெற்றது. பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாசிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் ஸக்கி, சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், சமூக மட்டத் தலைவர்கள் என பலர் இந்நிகழ்வின்போது அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது அக்கரைப்பற்று பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட துறைசார்ந்தோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்வின் நினைவாக சஞ்சிகையொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன்போது கண்கவர் கலை கலாசாரப் பாரம்பரிய நிகழ்வுகள் வைபவத்தில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்களைப் பரவசப் படுத்தியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். --