(கதிர்) சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்கு சின்னம் சூட்டி தொப்பி அணிவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (13) மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலன் பாடசாலையில் நடைபெற்றது.
மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலன் பாடசாலை அதிபர் சி.சிவபாதம் அவர்களின் தலைiமில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசத்தின் சற்றாடல் உத்தியோகஸ்தர் கி.யோகராசா, பாடசாலை பிரதி அதிபர் க.சந்திரகுமார், பாடசாலை சுற்றாடலுக்குப் பொறுப்பான ஆசிரியர்களான ம.சுந்தரலிங்கம், த.மருமசீலன் மற்றும் தொரிவு செய்யப்பட்ட 25 சுற்றாடல் முன்னோடி மாணவர்களும் இத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாடசாலைச் சமூகத்தில் சுற்றாடலை எவ்வாறு பேணுவது, சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக மாணவர்களுக்கு விழிபுணர்வுக் கருத்துக்கள் வழங்கப்பட்டு,மாணர்கள் நாளாந்தம் மேற்கொள்ளும் சுற்றாடல் தொடர்பான விடயங்களை எழுதுவதற்காக வேண்டி குறிப்புப் புத்தகங்களும் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

























