முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டம்

( ரவிப்ரியா )
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் மண்முனை தென் எருவில் பற்று பிரதெச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெட்ணத்தின் வழி நடத்தலில்,
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி  உத்தியோகத்தர் அருந்ததி.சீவரெத்தினம் ஏற்பாட்டில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு துறைநீலாவணை 01 தெற்கு கிராம சேவகர்  கோகுல்ராஜ் பங்குபற்றுதலுடன் அண்மையில் நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் பட்டிருப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரலிங்கம் முன் பிள்ளைப் பருவ பிள்ளைகளின் உள்ளத்தை சம நிலையில் வைத்திருப்பதற்காக கலையார்வச் செயற்பாடுகளை வீட்டினுள் ஈடுபடுத்திக் கொள்ளும் செய்முறை  பற்றியும். உளவளத் துறை ஆசிரியர் கே.துஷ்யந்தன் பிள்ளைகளின்  தனிப் பெரும் திறமைகளை வீட்டில் மேம்படுத்துவது சம்பந்தமாகவும், விரிவரை நிகழ்த்தினர்.

இக் கருத்தரங்கில் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.எம்.புவிதரன் சிறவர்  பாதுகாப்பு உத்தியோகத்தர் ரி.தயாளன்  ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 50க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இதில் பங்குபற்றினர்.