மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட பௌர்ணமி கலைவிழா நிகழ்வு

(நித்தி) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேச செயலகத்திற்கு வாய்பு வழங்கி அப்பிரிவில் உள்ள கலை கழகங்களின் நிழ்ச்சியை  ஆற்றுகை படுத்துவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இம்முறை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கலை கழகங்களின் கலை நிகழ்ச்சி இன்று (16.03.2014) மாலை 06.30 மணிக்கு மட்டு மகாத்மா காந்தி பூங்காவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி திரு மு.கோபாலரெட்ணம் தலமையில் நடைபெற்றது. இதன் போது  மாவட்ட உதவிச் செயலாளர் திரு ரங்கநாதன் பிரதம விருந்தினரான கலந்து கொண்டார். இக்கலை நிகழ்வில் தேற்றாத்தீவு 'தேனுகா' கலைக்கழகத்தின் பல நிகழ்ச்சிகள் ஆற்றுகை படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.