சித்தாண்டி-உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டுபோட்டி நிகழ்வு

(நித்தி) சித்தாண்டி உதயன்மூலை விவேகானந்த வித்தியாலயத்தில்  மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி  நிகழ்வு  இன்று பாடசாலையின் அதிபர் திருமதி.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதி ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பெ.சிவகுரு சிறப்பு அதிதிகள் கன்டிகப் திட்ட இணைப்பாளர் திரு.க.முரளிதரன் சேவ்த சில்றன் முகாமையாளர் திரு.மு.திருக்குமரன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டதை  தொடர்ந்து கல்குடா கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.சுபாஸ்சந்திரன் அவர்களினால் ஒலிம்பிக் தீபமேற்றப்பட்டு விளையாட்டுக்கள் நடைபெற்றன. மாணவ மாணவிகளின் அணிநடை, நிறம் தெரிவுசெய்தல், பழைய மாணவர்களுக்கான பலூண் ஊதி உடைதல் பெற்றார்ருக்கான விளையாட்டுக்கள் ஆசிரியர்களுக்கான விளையாட்டுக்களும் நடைபெற்றது. விளையாட்டுக்களில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகளுக்கு அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.