"மூன்றாவதுகண்" குழுவினரினால் நடாத்தப்பட்ட "பால்நிலை சமத்துவத்தை நோக்கிய அண்களின் பயணம்" நிகழ்வு


மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் குழுவினால் நடாத்தப்பட்ட 'சமத்துவத்திற்கான ஆண்களின் குரல்கள்' எனுந் தலைப்பிற்கமைவான நிகழ்வு இன்று திருமலை வீதி ஊறணியிலுள்ள புனித ஜோண்ஸ் தேவாலய சமூக மண்டபத்தில் இடம்பெற்றது.



மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்களால் "பெண்ணிலை வாதம்" சார்த  பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது.


இதன்போது, கடந்த பத்து வருடங்களாக பால்நிலைச் சமத்துவம், பெண்ணிலை வாதம் சார்ந்து செயற்பட்டுள்ள மூன்றாவதுகண் நண்பர்களின் செயற்பாடுகளும் புரிதல்களும் பற்றிய அனுபவப் பகிர்வுகளுடனான கருத்தரங்கும், ஓவியர் சு.நிர்மலவானனின் தாபனக் கலை ஓவியக் கண்காட்சி மற்றும்  "மூன்றாவதுகண்' நண்பர்கள் குழுவினரின் புத்தக வௌியீடும், கண்காட்சியும் இடம்பெற்றது.


இந் நிகழ்வு "பால்நிலை சமத்துவத்தை நோக்கிய அண்களின் பயணம்" எனும் பொருளுக்கமைய சிறப்பாக இடம்பெற்றதனை அவதானிக்க முடிந்தது. இதன்போது.  பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.