எந்த ஒரு இந்துவும் தனது வாக்குகளை பசில் ராஜபக்சவுக்கோ அல்லது அவர் ஆதரிக்கும் நபர்களுக்கோ எதிர்காலத்தில் வழங்கக்கூடாது.


எந்த ஒரு இந்துவும் தனது வாக்குகளை  கௌரவ அமைச்சரும்  பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவுக்கோ  அல்லது அவர் ஆதரிக்கும் நபர்களுக்கோ எதிர்காலத்தில் வழங்கக்கூடாது.  வ. கமலதாஸ்

அண்மையில் இவர் கம்பஹாவில் பொதுக்கூட்டமொன்றில் பேசிய போது இந்த நாட்டில் கடந்த வன்செயல் காலகட்டத்தில் முஸ்லிம்கள் அனுபவித்த  துன்பத்தின் அளவுக்கு வேறு எந்த மக்களும் துன்பம் அனுபவிக்கவில்லை என்று கூறியதை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க வழங்கும் செய்தி விமர்சனத்தில் செவிமடுத்தேன். இந்தக் கூற்று தமிழ் இந்துக்களைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியமானது. இவரது கருத்தில் இந்துக்கள் கடந்த வன்செயல் காலகட்டங்களில் குறைவாகவே துன்பப்பட்டனர் என்ற கருத்து தொக்கு நிற்பதால் அக்கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன். தமிழர் பிரதேசங்களில் ஆளும் தரப்பின் அரசியல் வியூகங்களை வகுக்கும் பொருளாதார அமைச்சரின் இந்த கூற்றையிட்டு மிகவும் வேதனைப்படுகின்றேன். இவரது இந்த நிலைப்பாடே இன்று கிழக்கில் இந்துக்களின் உரிமைகள் கிழக்கு மாகாண சபையால் புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாகவுள்ளது.



பல நூறுகள் உயிரிழப்புக்களை சந்தித்த முஸ்லிம்களது துன்பத்திற்கு அனுதாபப்பட்டு பல்வேறு சலுகைகளை வழங்கிவருகின்ற அமைச்சர் ஆயிரக்கணக்கான பௌத்தர்களினதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களினதும்  உயிர்களும் உடமைகளும் இருப்பிடங்களும் பறிபோயுள்ள துன்பத்திற்காக  கவலைப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர். ஜெயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் கப்பல் துறைமுக அமைச்சாயினும் சரி, புனர்வாழ்வு அமைச்சாயினும் சரி, இந்நாள் ஜனாதிபதி காலத்திலும் அனர்த்த நிவாரண மற்றும் மீள் குடியேற்ற அமைச்சாயினும் சரி வன்செயல் இழப்புக்களைக் காட்டி அதிக நிவாரணங்களையும் சலுகைகளையும் பெற்ற சமூகம் முஸ்லிம்களே. இந்துக்களுக்கு  இதுவரை அரசு ஒப்பீட்டளவில் எதுவுமே வழங்கவில்லை என்பதை வேதனையுடன் தெரிவிக்கின்றேன். மேற்படி அமைச்சுக்களிலுள்ள புள்ளி விபரங்களே இதற்கு ஆதாரம். காலம்சென்ற  அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் காலம் தொட்டு இன்றுவரை உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு மிகவும் அதிகமான  உயிர்களையும், உடைமைகளையும்,  நிலங்களையும், கலாசார சொத்துக்களையும் இழந்த ஒரு சமூகம் இலங்கை நாட்டில் இந்துக்களே.

எந்த ஒரு முஸ்லிம் பிரசையும் முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு தனது அரசியல் அதிகாரமான வாக்கை வழங்குவது இல்லை. அதனால் அரசியலில் முஸ்லிம்கள்  ஆரோக்கியமாக உள்ளனர். நாற்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் மீது கொண்ட பயம் காரணமாகவும் முஸ்லிம்களின் தலைமைத்துவமான முஸ்லிம் காங்கிரசின் உறுதிப்பாடு காரணமாகவும் பௌத்தஅடிப்படைவாத சக்திகளால் வழிநடத்தப்படும் இலங்கை அரசு முஸ்லிம்களை திருப்திபடுத்துவதையே பிரதானம் என்று கருதுகின்றது. இந்துக்கள் முப்பத்திரெண்டு நாடுகளில் வாழ்ந்தாலும் தாம் வாழும் நாடுகளில் தம்மை அரசியல் மயப்படுத்திக்கொள்ளாமல் மிதவாதத்தை கடைப்பிடித்து வருகின்றனர். தமிழ்ப் பாதிரிமார்களே இந்துக்களுக்காக கண்ணீர் வடிக்கின்றனர். அதனால் அரசு இந்துக்களை கணக்கில் எடுக்கவில்லை என்பது அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களின் பேச்சின்மூலம் வெளிப்படுகின்றது. இலங்கையில் இப்படியான நிலை இனிமேலும் நீடித்தால் தமிழ் இந்துக்கள் மலையகத் தமிழர்போல குறைந்த வாழ்க்கைத்தர நிலைக்குள்  விரைவில் முடக்கப்பட்டுவிடுவோம். இந்துக்களைப்  பொறுத்தவரையில் இனிமேலும் அவர்களது சந்ததியினரின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி அக்கறையில்லாமல் செயற்படக்கூடாது. கூளைப்போல் நட்பு   வாளைப்போல் பகையைவிட ஆபத்தானது என்ற எமது முதுமொழியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்

இனி வரும் காலங்களிலாவது இந்துக்கள் தமது வாக்கையோ அல்லது உடமைகளையோ இந்து அல்லாத ஒருவருக்கோ அல்லது இந்துகளுக்கு உரிய இடம் வழங்காத  கட்சிக்கோ வழங்கக்கூடாது. இந்துக்களின் வாக்குப் பலத்தின் மூலமே இனிவரும் காலத்தில் தமிழரின் உரிமைகளும் இந்த நாட்டில் நிலைநாட்டப்படும் சாத்தியம் உள்ளது. இதற்காக தமிழ்த் தரப்பில் பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்துக்கள் இந்துக்களால் வழிநடத்தப்படும் தமிழ்க்கட்சியொன்றிலுள்ள இந்துக்களுக்கே வாக்களிக்க வேண்டும். அதன் மூலமே ஆட்சியாளர்களின் கண்களைத் திறக்கமுடியும்.

வ. கமலதாஸ்
தலைவர்  - மட்டக்களப்பு இந்து மாமன்றம்
பிராந்திய இணைப்பாளர் – விஷ்வ ஹிந்து பரிசத் - கிழக்கு மாகாணம்