(ரேவநிசாந்)மட்டக்களப்பின் மண்முனை தென்எருவில் பற்று பிரேதேச பிரிவில் மகிழூர்முனை 110பி கிராமத்தில் மண்டபத்தடியில் கோயில்கொண்டு அடியவர்களின் இடுக்கண் களைந்து இன்னல்களை நீக்கி இஷ;ட சித்திகளை வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மண்டபத்தடி பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 5ம்நாளான 15.03.2014 ம் திகதி சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு கண்ணகிபுரம் கருணை விநாயகர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி ஆரம்பித்து மண்டபத்தடி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வேழமுகத்து விநாயகனுக்கு பாலாபிசேக நிகழ்வு சிறப்பாக விசேட பூசைகளுடன் இடம்பெற்றது.
இச் செய்தியில் நாம் இறைவனுக்கு செய்யும் முக்கிய அபிசேக திரவியங்களும் அவற்றின் பலன்களும் அறிந்து கொள்வோம் (சுத்தமான தண்ணீரால் அபிசேகம் செய்தால் நினைக்கின்ற காரியம் நிறைவேறும்.
இளநீரால் அபிசேகம் செய்தால் குடும்பம் நலம் பெறும்.
பசும் பாலினால் அபிசேகம செய்தால் ஆயுள் அதிகரிக்கும்
நல்லெண்ணெய் அபிசேகம் செய்தால் வாழ்க்கை சுகமாகவும் சுவையாகவும் அமையும்.
சந்தனத்தால் அபிசேகம ;செய்தால் எட்டுவித செல்வம் கிடைக்கும்
நெல்லி முல்லைப பொடி செய்து அபிசேகம் செய்தால் நோய்கள் நீங்கும்
பஞ்ச காவியத்தால் அபிசேகம் செய்தால் பாவங்கள் நீங்கும்
பஞ்சமிர்தத்தால் அபிசேகம் செய்தால் உடல் நலம் பெறும்
தேன் அபிசேகம் செய்தால் வாழ்வு இன்பமயமாகும்
வாழைப்பழத்தால் அபிசேகம் செய்தால் பயிர்கள் செழிக்கும்
அன்னத்தால் அபிசேகம் செய்தால் ராஜபோக வாழ்வு கிட்டும்.
மாப்பொடி அபிசேகம் செய்தால் கடன் தீரும்
மஞ்சல் பொடி அபிசேகம் செய்தால் வசீகரம் கிட்டும்
கரும்பின் சாறு அபிசேகம் செய்தால் பிணி நீங்கும்.
எலுமிச்சம் சாறு அபிசேகம் செய்தால் பயம் நீங்கும்
அபிசேகத்தூள் அபிசேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.
விபூதி அபிசேகம் செய்தால் அறிவு பெருகும்.
சந்தனம் அபிசேகம் செய்தால் பக்தி பெருகும்.
குங்குமம் அபிசேகம் செய்தால் தீர்க்க சுமங்கலியாய் வாழலாம்.
பன்னீர் அபிசேகம் செய்தால் நினைத்த காரியம் கை கூடும்.
ஆதாரம்: இந்துசமய நூல்கள்)

















