(நித்தி) பலாச்சோலை விபுலானந்தா வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று (14.03.2014) பாடசாலையின் திரு.தா.சித்திரவேல் அதிபர் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகள் ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பி.சிவகுரு கல்குடா கல்விவலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.க.சுபாஸ்சந்திரன் செங்கலடி செல்லம் பிறியர் உரிமையாளர் திரு.க.மோகன் கௌரவ அதிதிகள் ஏறாவூர் பற்று-2 பாடசாலை அதிபர்கள் அழைப்பு அதிதிகள் கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி உறுப்பினர்கள் ஆலயத் தலைவர்கள் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களினால்; அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன் ஒலிம்பிக் தீபமேற்றி விளையாட்டுக்கள் நடைபெற்றது. மாணவ மாணவிகளின் உடற்பயிற்சி கண்காட்சி பலூன் ஊதி உடைதல் பழைய மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுக்கள் பெற்றோருக்கான விளையாட்டுக்கள் நடுவர்களுக்கான விளையாட்டுக்கள் என பல விளையாட்டுகள் நடைபெற்றது.
விளையாட்டுக்களில் திறமைகளை வெளிகாட்டி வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வெற்றிக்கேடயங்கள் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் நடைபெற்ற இல்ல மெய்வல்லூநர் விளையாட்டுபோட்டிகளில் பல வெற்றிகளை பெற்று முதலாம் இரண்டாம் இடங்களைப்பிடித்த இல்லங்களுக்கும் அதிதிகளினால் பரிசில்கள் வெற்றிகேடங்களும் வழங்கிவைக்கப்பட்டன.












