(சித்தாண்டி நித்தி) வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வு இன்று (08.03.2014) வித்தியாலயத்தின் திரு.எஸ்.மோகன் அதிபர் தலைமையில் வந்தாறுமூலை கணேச வித்தியலய மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதி கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.குலேந்திரகுமார் கௌரவ அதிதி மட்/தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதி திரு.எஸ்.இராஜேந்திரன் சிறப்பு அதிதி கல்குடா கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.என்.நவரெத்தினம் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேற்பு நிகழ்வுடன் ஒலிம்பிக் சுடரினை கல்குடா கல்வி வலய உடற்கல்விப் பணிப்பாளர் திரு.எஜ்.சுபாஜ்சந்திரன் ஏற்றிவைத்ததை தொடர்ந்து விளையாட்டுக்கள் நடைபெற்றன. இல்லங்களுக்கிடையிலான போட்டி நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அணிநடை நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. அத்துடன் பழைய மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு பெற்றோருக்கான விளையாட்டு ஆசிரியர் மற்றும் மாண மாணவிகளின் விநோத உடை போட்டி நிகழ்வுகளும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இல்லங்களுக்கடையில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குரிய பரிசில்கள் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடங்களை நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.












