கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய இறுதிநாள் தீ மிதிப்பு நிகழ்வு

(உ.உதயகாந்த்)

மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா உற்சவமானது கடந்த 2014.03.10 ஆம் திகதி திருக்கதவு திறத்தல் நிகழ்வுடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஏழு நாட்களும் கிராம பொதுமக்களாலும் தனி குடும்பத்தவர்களாலும் விசேட பூசை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு ஆலய பிரதம பூசகர் நா.வை.பொன்னையாவினால் நாடத்தப்பட்டன.

இறுதிநாளாகிய நேற்றைய தினம் (16) ஞாயிற்றுக்கிழமை அம்மனும் ஆயிரக்கணக்கான அன்னையின் அடியார்களும் வங்கக்கடலில் மஞ்சள் நீராடி தீமிதிப்பு இடம்பெற்றதுடன் திருவிழா நிகழ்வானது இனிதே நிறைவேறியது.