கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உயர்கல்வி அமைச்சினால் அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் நிருவாகம் விரிவுரையாளர்களைப் பழிவாங்குகிறது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்
உயர்கல்வி
அமைச்சர்கள் பலதடவைகள்; பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பெருந்தொகையான
நிதியை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர் என்றும், பல்கலைக்கழக நிருவாகம்
விரிவுரையாளர்கள் மீது பழிவாங்கல்களை மேற்கொள்கிறது என
பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வி மீதான விவாதத்தில் கலந்துகொண்டு
உரையாற்றிய பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்
தொடர்ந்து உரையாற்றுகையில்; 1981ஆம் ஆண்டு பல்கலைக்
கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு, 1986 ஆண்டு பல்கலைக்கழகமாகத்
தரமுயர்த்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகமானது கடந்த காலங்களில் பெரும்
வளப்பற்றாக்குறைகளை எதிர்நோக்கியிருந்தது.
எனினும் தற்காலத்தில் பலதடவைகள்
அமைச்சர்கள் விஜயம் செய்து பெருந்தொகையான
நிதியை ஒதுக்கிக் கொடுத்திருந்தனர்."
விஞ்ஞானப்
பீடம் -199 மில்லியன்,கலைகலாசார பீடம் -121 மில்லியன்,
நூலகம்
- 171 மில்லியன், வர்த்தக முகாமைத்துவ பீடம்
-230 மில்லியன்,
மருத்துவ
பீடம் - 360 மில்லியன்,மருத்துவ பீடத்தின் போதனா வைத்தியசாலைப் பிரிவு-299
மில்லியன், விரிவுரை மண்டபங்கள்-30 மில்லியன்,உடற்பயிற்சி நிலையம்-19.5 மில்லியன,விடுதிகள்– 242 மில்லியன்,
பரீட்சை
மண்டபங்கள் - 19 மில்லியன், கேட்போர் கூடம் - 46.6 மில்லியன், பழைய கட்டடங்களைப் புனரமைக்க
– 178 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிதியொதுக்கீட்டின்
காரணமாக இன்று கிழக்குப் பல்கலைக்கழகம்
பல அழகிய கட்டடத்தொகுதிகளைக் கொண்ட
பாரிய வளர்ச்சியினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
எனினும்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் புதிய உபவேந்தர்
நியமிக்கப்பட்ட பின் ஆறு விரிவுரையாளர்கள்
பல்கலைக் கழகத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
நிருவாகத்தினது விரிவுரையாளர்கள் மீதான பழிவாங்கல்கள் பலவகையிலும்
தொடர்ந்த வண்ணமிருக்கிறது.
இது
குறித்து விரிவுரையாளர்கள் நிருவாகத்தின் மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவைபற்றிய முறைப்பாடுகள்
ஏற்கனவே உயர்கல்வி அமைச்சுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே இங்குள்ள பிரச்சினை.
இதனை நிவர்த்தி செய்தால் கிழக்குப் பல்கலைக் கழகம் குறுகிய காலத்தில்
உயர்நிலை அடையும்.












