களுவன்கேணி சிங்காரச்தோப்பு சரஸ்வதி வித்தியாலய இல்லவிளையாட்டு போட்டி நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) களுவன்கேணி
 சிங்காரத்தோப்பு சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இன்று (06.03.2014) மிகவும் சிறப்பான முறையில் பாடசாலையின் அதிபர் வி.ஆதவன் தலைமையில் பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்றது. 

இல்லவிளையாட்டு போட்டியை சிறப்பிக்கும்முகமாக கௌரவ விருந்தினர் கல்குடா வலயக்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ரி.அனந்தரூபன் சிறப்பு அதிதி ஏறாவூர்-2 கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பி.சிவகுரு அழைப்பு அதிதிகள் ஆசிரிய ஆலோசகர் திரு.பி.யோகராஜா திரு.கே.யோகராஜா கிராமசேவகர் விடி.அரியராஜா கல்குடா கல்வி வலய திட்டமிடல் திரு.எஸ்.தயாகரன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் விளையாட்டுகழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அதிதிகள் வரவேற்புடன் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு விளையாட்டுகள் நடைபெற்றது. மாணவ மாணவிகளினால் அணிநடைகள் இடம்பெற்றதுடன் பழைய மாணவ விளையாட்டுக்கள் பெற்றோருக்கான விளையாட்டுகள் என்பான சிறப்பாக நடைபெற்றது. மருதம் நெய்தல் இரண்டு இல்லங்களிலும் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கான வெற்றிகேடயங்கள் சிறப்பு பரிசில்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.