(கிருதா)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப் பற்றுக் கோட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விக் காரியாலயத்தில் தரம் 5 இல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (27.03.2014) நடைபெற்றது. போரதீவுப் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் அவர்களும், ஆரம்பப் பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும், அதிபர்களும் கலந்து கொண்டனர்.












