(மட்டு சுரேஸ், கதிர்)
நோர்வே தூதுவராலயத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு சர்வோதயம் அமைப்பின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி தேசோதயசபை குழுவினருக்கு பிரஜா உரிமைகள் தொடப்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்றைய தினம் (07) இடம் பெற்றது.
மட்டக்களப்பு சர்வோதய அமைப்பின் சமூக ஒருங்கிணைப்பாளர் கே.மதனகுமார் தலைமையில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் ஒன்றிணைந்து தீர்வினைக்காணல் எனும் கருத்திட்டத்தின் கீழ் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கலாநிதி எம். கோபாலரெட்ணம் , மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசோதய சபையின் தலைவர் க.வேதாரணியம் மற்றும் களுவாஞ்சிகுடி தேசோதயசபையின் உறுப்பினர்கள் , பிரதேசத்தின் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், கிரா அபிவிருத்திசங்கம், சர்வோதயத்தின் சிரமதான குழு உறுப்பினர்கள், மண்முனைதென் எருவில் பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சமாதானம், அபிவிருத்தி, நல்லாட்சி என்பவற்றில் பொதுமக்களுக்கான பிரஜா உரிமைகள் தொடர்பாகவும் தகவல்களை பொதுமக்கள் மத்தியில் எவ்வாறு பரிமாற்றலாம் எனவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
















